மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தும் இங்கிலாந்து வீரர்கள்! ஐபிஎல் தொடரில் தொடரும் சிக்கல்!
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு மேல் துவங்கப்பட்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடத்தவும் பிசிசிஐ தகுந்த ஏற்பாடுகளை ஏற்படுத்த தயாராக இருக்கிறது.
ஒரு பக்கம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடைபெறுவது அனைவருக்கும் சந்தோசமாக இருந்தாலும், மறுபக்கம் இங்கிலாந்து வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியாது என்கிற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் மிகப்பெரிய சோகம் எந்த அணிக்கு ஏற்படப் போகிறது என்று கேட்டால் அது நிச்சயமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான் என்று இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இவர்கள் அனைவரும் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாமல் போனால் நிச்சயமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பலவீனமாக காணப்படும்.
குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் ஜோஸ் பட்லர் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் மிக சிறப்பாக இதற்கு முந்தைய ஐபிஎல் தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 7 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகள் வெற்றியடைந்து, 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5வது இடத்தில் தற்போது இருக்கிறது. மீதமுள்ள 7 ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிக சிறப்பாக விளையாடினால் மட்டுமே குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட வில்லை என்றாலும் அவர்களுக்கு அது பெரிய அளவில் பாதிக்காது என்றும் ஆகாஷ் சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.
மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அதிக வருவாயை தற்பொழுது பெற்று வருகிறார்கள்.