இங்கிலாந்தின் தோல்விக்கு இவர் ஒருவர்தான் காரணம்! புதிய குண்டை தூக்கிப்போட்ட மைக்கேல் வாகன்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
போட்டி சமனில் முடிவடைந்துவிடும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில் மிகச் சாமர்த்தியமாக செயல்பட்ட இந்திய அணி இறுதி நேரத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு ஜோ ரூட் ஒரு முக்கிய காரணம் என்று தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 154 ரன்கள் முன்னணியில் இந்திய அணி 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் அவுட் ஆகி விட்டார். அதன் பின்னர் பும்ரா மற்றும் ஷமி 9 ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து அணிக்கு தலைவலியாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் தோல்விக்கு இவர் ஒருவர்தான் காரணம்! புதிய குண்டை தூக்கிப்போட்ட மைக்கேல் வாகன்! 2 ஜோ ரூட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள் அவர்களுக்கு லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களை எப்படி அவுட் ஆக்க வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்கும்.
ஆனால் அன்றைய நாள் ஆட்டத்தில் அவர்கள் அதை செய்ய தவறிவிட்டார்கள் என்று கூறியுள்ளார். குறிப்பாக பும்ரா மற்றும் ஷமி விளையாடும் பொழுது நிறைய ஃபீல்டர்கள் பவுண்டரி லைன் பக்கமாக நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் அனைவரும் சிலிப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருக்க வேண்டும். மேலும் பந்துவீச்சாளர்கள் இவர்கள் இருவருக்கும் சரியான முறையில் பந்து வீசவில்லை என்றும், நெருக்கடியைக் கொடுத்து விரைவாக இவர்களை அவுட்டாக்க அவர்கள் தவறிவிட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தற்போது முன்னணி வகிக்கிறது. வெற்றி பெற்ற அதே வேகத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராக இருக்கும் நிலையில் இரண்டு போட்டியிலும் சுமாராக விளையாடிய இங்கிலாந்து அணி சற்று நெருக்கடியான நிலையில் தற்போது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிச்சயமாக 3வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து எனக்கு மிக கடினமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார். 3வது டெஸ்ட் போட்டி 25ஆம் தேதி லீட்ஸ்’சில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.