என்னப்பா இது டெஸ்ட் போட்டிக்கு வந்த சோதனை: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து

testmatch englandindia camcelled
By Irumporai Sep 10, 2021 08:05 AM GMT
Report

இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட்பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது  இதில் இந்திய குழுவினருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தியாவின் பிசியோ நிபுணர் யோகேஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக திட்டமிட்டபடி 5-வது போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ் என முடிவு வந்தாலும் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யபடுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அமைந்துள்ளது.