இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுக்கும் இங்கிலாந்து வீரர்

Alastair Cook
By Petchi Avudaiappan Jun 23, 2021 12:47 PM GMT
Report

 சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது என முன்னாள் வீரர் அலஸ்டர் குக் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது.

இந்த தொடரில் இந்திய அணி எளிதாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி விடும் என்று பலர் கூறி வரும் நிலையில், அலஸ்டர் குக் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த தடுமாறும் என்று கூறியிருக்கிறார்.

நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் அனுபவமும் மறுபக்கம் இந்திய அணியின் பலமும் ஒருசேர சந்திக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடைசியாக 2007ஆம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.

அதன் பின் இதுவரை அப்படியான ஒரு வெற்றியை இந்திய அணியால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.