வெறும் அட்வைஸ் பண்ணியே கோடியில் அள்ளும் இளம்பெண் - ஆச்சர்யம் ஆனால் உண்மை!
இளம் பெண் ஒருவர் அறிவுரை கூறியே மாதம் கோடி கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
கவுன்சிலிங்
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ரோமா. இவர் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். அதில், குழந்தை பிறந்த பின்பு குழந்தையை தூங்க வைப்பது?
எப்படி தாய்ப்பால் முறையாக கொடுப்பது? சத்தான உணவை குழந்தைகளுக்கு தயாரிப்பது எப்படி? குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால் எப்படி சாப்பிட வைக்க வேண்டும்? புத்திசாலி குழந்தைகளாக எப்படி வளர்க்க வேண்டும்?
கோடியில் வருமானம்
குழந்தைகளிடம் எப்படி அணுக வேண்டும்? பேச வேண்டும்? பழக வேண்டும்? போன்ற தகவல்கள் அடங்கு. இதற்காக, பெற்றோர்களிடம் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் செய்ய 40 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார். 17 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்து வருகிறார்.
மேலும் வாரத்திற்கு 6 மணி நேரம் மட்டுமே இதனை செய்கிறார். அதன் படி, ஆண்டிற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் கேட்போரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.