நடுரோட்டில் இளம்பெண் உயிருடன் எரித்துக் கொடூர கொலை! அதிர்ச்சி வீடியோ!
இங்கிலாந்தில் 31 வயது இளம்பெண்ணை மூன்று இளைஞர்கள் உயிருடன் எரித்துகொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7.30 மணியளவில் இளம்பெண்ணை நடுரோட்டில் வைத்து 3 இளைஞர்கள் உயிருடன் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிசென்றுள்ளனர்.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு குவிந்த பொதுமக்கள், தீயை அணைத்து அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி உதவியுடன் மூன்று இளைஞர்களை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.