இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் பயங்கர தாக்குதல்... - லண்டனில் பரபரப்பு சம்பவம்...!
இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் பயங்கர தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்
லண்டன், வெம்ப்லியில் நேற்று நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியை காண இரு நாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகே ஒரு மதுபான விடுதி உள்ளது.
இந்த மாதுபான விடுதியில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது, விடுதிக்குள் முகமூடி அணிந்த வந்த சுமார் 100 ஆண்கள், மதுபான விடுதியில் புகுந்து வாடிக்கையாளர்களைத் தாக்கினர்.
4 பேர் கைது
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெர்மன் கால்பந்து ரசிகர்கள் என தெரியவந்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Wix Trends | Four arrested as masked German fans attack England supporters at pub - https://t.co/xXLAK7FLBf @alexwills556
— Wix Trends (@Awixy2) September 27, 2022
Come to Nigeria #GOAT? japa #audioleak #DARTMission #England #Germany #football #PUBGMOBILE Trends #londonbridgeisdown #torychaos pic.twitter.com/DrnjZwGhD3