சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் -ரன்களை குவித்த இந்திய அணி
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்து ஆல் அவுட்டானது. இதனைத் தொடர்ந்து 5வது நாளான இன்று 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாட தொடங்கியது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் வெளியேற பும்ரா, முகம்மது ஷமி இருவரும் களம் கண்டனர். இவர்கள் இருவரும் என்ன அடித்துவிட போகிறார்கள் என இந்திய ரசிகர்களே எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்து அணி சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதாக ஒரு முடிவை கையில் எடுத்தது.
காரணம் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்த போது பும்ரா வீசிய பவுன்சர் பந்துகள் ஆண்டர்சனை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதற்கு பழிவாங்குவதாக நினைத்து பும்ரா-ஷமி ஜோடிக்கு அப்படியான பந்துகளை கையில் எடுத்தனர்.
ஆனால் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என விளாச இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் குவித்தது. இதுவே இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.