இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேட் டெர்ன்பாச் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்களும், 34 டி20 போட்டிகளில் 39 விக்கெட்களையும் வீழ்த்தி நட்சத்திர வீரராக வலம் வந்த ஜேட் டெர்ன்பாச்சுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இத்தாலி தேசிய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில், டெர்ன்பாச் இத்தாலி அணியினருடன் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். இவருடன் நார்தம்டன்ஷிர் கவுண்டி அணியின் முக்கிய வீரர் கரேத் பெர்க்கும் இத்தாலி அணியில் இணைந்துள்ளார்.
இந்த இருவரும் இணைந்திருப்பதால் இத்தாலி அணி தற்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து வீரர் டி20 உலகக் கோப்பை தொடரின்போது இத்தாலி அணிக்காக விளையாடவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.டி20 உலகக் கோப்பை தகுதி சுற்றில் இத்தாலி அணி ஜெர்சி, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.