இந்திய அணி நெருங்க கூட முடியாத சாதனை - டெஸ்ட் கிரிக்கெட்டில் சரித்திரம் படைத்த இங்கிலாந்து
147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
2 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
தொடரை வென்ற இங்கிலாந்து
2வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 125 ரன்களுக்கு சுருண்டது.
அதை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து ஆடிய 582 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
5 லட்சம்
இந்த போட்டி மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை 1082 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இங்கிலாந்து அணி 5 லட்சம் ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
868 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4,29,000 ரன்கள் குவித்துள்ள ஆஸ்திரேலியா அணி இந்த பட்டியலில் 2வது இடத்தில உள்ளது. 586 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2,78,751 ரன்கள் குவித்து இந்திய அணி 3 வது இடத்தில உள்ளது.