வெஸ்ட் இண்டீஸை பொளந்து கட்டிய இங்கிலாந்து - மோசமான தோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி
டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கிய நிலையில் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. கிறிஸ் கெயில் எடுத்த 13 ரன்கள் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 14.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2.2 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மொயீன் அலி, மில்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆனாலும் 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 8.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அஹீல் ஹூசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
