வங்கதேசத்தை பந்தாடிய இங்கிலாந்து - 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரில் அபுதாபியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் முகமதுல்லா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகப்பட்சமாக முஸ்பிஹூர் ரஹீம் 29 ரன்கள் எடுக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் மில்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 61 ரன்கள் விளாச இங்கிலாந்து 14.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
