விடுதி அறைக்குள் மாணவர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சக மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்...!
மேற்கு கோதாவரி விடுதி அறைக்குள் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடூரமாக தாக்கிய மாணவர்கள்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீமாவரம், மேற்கு கோதாவரியில் SRKR பொறியியல் கல்லூரி படிக்கும் மாணவனை, விடுதி அறைக்குள் 4 பொறியியல் மாணவர்கள் சேர்ந்து குச்சிகள், PVC பைப்புகள் கொண்டு தாக்குகின்றனர்.
மேலும், அந்த மாணவனின் மார்பில் சூடான இரும்பு பெட்டியால் முத்திரை குத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதைப் பார்த்த யாரோ ஒருவர் இச்சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்கிய மாணவர்களை கைது செய்துள்ளனர். இது குறித்து மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
