தாய் குளிப்பதை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டிய இன்ஜினீயர் உட்பட 2 பேர் கைது

Perambalur videothreat
By Petchi Avudaiappan Apr 18, 2022 09:56 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

பெரம்பலூர் அருகே தாய் குளிப்பதை வீடியோ எடுத்து சிறுமியை மிரட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் வடக்கு தெருவை சேர்ந்த செல்வன் என்பவர்  அதே கிராமத்தில் எலக்ட்ரீசியன் மற்றும் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள  32 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் குளித்து கொண்டிருந்ததை மறைந்து இருந்து தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். 

வீடியோவை செல்வன் அந்த பெண்ணின் 15 வயதுடைய மகளின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறும் இல்லையென்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வேன் என மிரட்டியும் உள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனது தாயிடம் அழுதுக் கொண்டே விஷயத்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் செல்வன் மீது புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் செல்வனை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது இந்த செயலுக்கு அவரது அக்கா உறவுமுறையான அதே ஊரைச் சேர்ந்த மலர்கொடி என்பவர் முழுக்க, முழுக்க உடந்தையாக இருந்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து மலர்கொடியையும் போலீசார் கைது செய்தனர்.செல்வனின் தாய் வேலூர் ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.