சென்னையில் நடுக்கடலில் 50 அடி ஆழத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஜோடி...!
சென்னை அருகே விழிப்புணர்வை ஏற்படுத்த நடுக்கடலில் 50 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டம்
ஆந்திராவை சேர்ந்த சுரேஷ். இவருக்கும், ஈஞ்சம்பாக்கத்தை சார்ந்த கீர்த்தனா என்பவருக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர்கள் கடலில் பிளாஸ்டிக் சேர்வதை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டனர்.
நடுக்கடலில் நிச்சயதார்த்தம்
இதனையடுத்து, சென்னை அருகே வெட்டுவாங்கேனி கடலுக்கு படகில் சென்றனர். ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன், பயிற்சி மேற்கொண்டு கடலில் 50 அடி ஆழத்தில் இறங்கி, இவர்கள் எளிமையான முறையில் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்தனர்.
இது குறித்து சுரேஷ், கீர்த்தனா கூறுகையில், பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னை அருகே கடலுக்குள் 50 அடி ஆழத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த வீடியோக்கள், புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.