147 ஆண்டு வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனை - அசத்திய இங்கிலாந்து அணி!
எந்த அணியும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை இங்கிலாந்து அணி செய்துள்ளது.
இங்கிலாந்து அணி
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது.
இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 348 ரன்களும், இங்கிலாந்து அணி 499 ரன்களும் எடுத்தன. தொடர்ந்துப் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 254 ரன்கள் எடுத்தது.
பிரம்மாண்ட சாதனை
12.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே டெஸ்ட் போட்டியில் நூறு ரன்களுக்கும்
அதிகமான இலக்கை மிகக் குறைந்த ஓவர்களில் எட்டி வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும், நூறு ரன்களுக்கும் அதிகமான இலக்கை அதிக ரன் ரேட் உடன் எட்டிய அணி என்ற சாதனையையும் செய்துள்ளது.