இரண்டாம் நாள் ஆட்டம்: நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து?

ENG vs NZ 2nd Test Match
By Petchi Avudaiappan Jun 11, 2021 09:58 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சவாலான இலக்கை நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனையடுத்து 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களில் ரோரி பர்ன்ஸ் பொறுப்புடன் விளையாடி 81 ரன்கள் அடிக்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டம்: நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா இங்கிலாந்து? | Eng Vs Nz 2St Test Match 2Nd Day

லாரன்ஸ் 67 ரன்னுடனும், மார்க் வுட் 16 ரன்னுடனும் காலத்தில் உள்ள நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

இதில் நியூசிலாந்து அணிக்கு சவாலான இலக்கை இங்கிலாந்து நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.