இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி பேட்டிங்

England vs Newzealand 1st test match
By Petchi Avudaiappan Jun 02, 2021 10:29 AM GMT
Report

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இது முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தயாராகும் வகையில் இந்த தொடரை அந்த அணி அணுகும் என்பதால் இது போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.