நியூசி. உடனான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி பெற 273 ரன்கள் இலக்கு
நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 273 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் வரும் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 378 ரன்களும், இங்கிலாந்து 275 ரன்களும் எடுத்தன.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 378 ரன்களும், இங்கிலாந்து 275 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையுடன் மூன்றாவது நாள் முழுவதுமாக மழையினால் நடத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து 169 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது.
இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற 273 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் வெற்றி இலக்கை எட்ட இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil