3வது நாளில் எழுச்சி பெறுமா இங்கிலாந்து அணி? - பலே திட்டத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
இங்கிலாந்து நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கான்வே சிறப்பாக விளையாடி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் அந்த அணி நியூசிலாந்தை விட 267 ரன்கள் பின்தங்கியுள்ளது.
எனவே இன்றைய நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நியூசிலாந்து பவுலர்கள் இங்கிலாந்து விரைவில் ஆட்டமிழக்க செய்யும் முனைப்புடன் களம் இறங்குவதால் இன்றைய நாள் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி பயணித்த படகு விபத்து! கடலில் தத்தளித்த பயணிகள் பத்திரமாக மீட்பு IBC Tamil