இங்கிலாந்து அணியை அலற விட்ட டேவான் கான்வே - ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து

1st test match ENG vs NZ
By Petchi Avudaiappan Jun 03, 2021 09:54 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வலுவாக உள்ள நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சாதனை 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியை அலற விட்ட டேவான் கான்வே - ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து | Eng Vs Nz 1St Test Match Day2

அந்த அணியின் அறிமுக வீரரான டேவான் கான்வே இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்து சதமடித்தார். அவர் 136 ரன்களுடன் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர வைத்துள்ளார். 

இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் டேவான் கான்வேயின் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

டேவான் கான்வே இந்தச் சதத்தின் மூலம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக போட்டியில் 131 ரன்கள் எடுத்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையையும் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.