கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் என்றால் அது இவர்கள் மட்டும்தான்! விராட் கோலி இல்லை! கடுப்பான நிக் காம்ப்டன்

India Virat Kohli ENGvsIND
By Thahir Aug 21, 2021 10:23 AM GMT
Report

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் ஒரு சிலர் இந்திய அணி வீரர்களிடம் மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய வீரர்கள் ஒரு சிலரும் அவர்களது முறை வரும் பொழுது, தக்க பதிலடி கொடுத்தனர்.

குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் ஜஸ்பிரித் பும்ராவை நிறைய முறை 2வது இன்னிங்சில் சீண்டிப் பார்த்தனர். இருப்பினும் பும்ரா ஷமி உடன் மிக அற்புதமாக விளையாடி ஒன்பதாவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தார்.

அது மட்டுமின்றி இங்கிலாந்து அணி அதனுடைய 2வது இன்னிங்சில் உரையாடும் பொழுது தன்னுடைய முழு கோபத்தை பந்துவீச்சில் வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் என்றால் அது இவர்கள் மட்டும்தான்! விராட் கோலி இல்லை! கடுப்பான  நிக் காம்ப்டன் | Eng Vs Ind Virat Kohli

போட்டி முடிந்த பின்னர், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் இந்திய அணியின் விராட் கோலி மைதானத்தில் எல்லை மீறி நடந்து கொள்கிறார் என்றும் வீரர்களுடன் வார்த்தைகளால் அளவுக்கு அதிகமாக சீண்டுகிறார் என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் இந்தியாவுக்கு இது 2012 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது, மைதானத்தில் விராட் கோலி என்னை மீறி வார்த்தைகளால் நிறைய முறை சீண்டியதாக தற்போது அவர் கூறியுள்ளார்.

அந்த சம்பவத்தை எப்பொழுதும் தன்னால் மறக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். விராட் கோலி இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல என்றும் எதிரணி வீரர்களிடம் அளவுக்கு மீறி வார்த்தைகளால் வம்பிழுப்பது சரியல்ல என்றும் நிக் காம்ப்டன் தற்பொழுது கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் என்றால் அது இவர்கள் மட்டும்தான்! விராட் கோலி இல்லை! கடுப்பான  நிக் காம்ப்டன் | Eng Vs Ind Virat Kohli

ஜோ ரூட்,சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேன் வில்லியம்சன் ஜென்டில்மேன் பேட்ஸ்மேன்கள்

விராட் கோலி தகாத முறையில் இவ்வாறு ஒரு படி கீழே இறங்கி வார்த்தைகளால் மற்ற வீரர்களை வம்புக்கு இழுப்பதை ஒப்பிட்டு பார்க்கையில் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகிய அனைவரும் ஜென்டில்மேன் பேட்ஸ்மேன்கள் என்றும் நிக் காம்ப்டன் இறுதியாக கூறி முடித்தார்.