இங்கிலாந்து அணியில் 3 முக்கிய வீரர்கள் கம்பேக்..ஆனந்தத்தில் ஜோ ரூட்

England Cricketer Joe Root INDvsENG
By Thahir Aug 30, 2021 11:15 AM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் 3 முக்கியமான வீரர்கள் அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் முழுவதுமாகவே ஆடவில்லை. முதல் போட்டியில் மட்டுமே ஆடிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் காயம் காரணமாக விலகினார்.

இங்கிலாந்து அணியில் 3 முக்கிய வீரர்கள் கம்பேக்..ஆனந்தத்தில் ஜோ ரூட் | Eng Vs Ind Test Match Joe Root England

2வது டெஸ்ட்டில் ஆடிய மார்க் உட் காயம் காரணமாக 3வது டெஸ்ட்டில் ஆடவில்லை. பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், மற்றொரு ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸும் இந்த தொடரின் முதல் 3 போட்டிகளில் ஆடவில்லை. டேனியல் லாரன்ஸ், கவுண்டி கிரிக்கெட்டில் ஆட அனுப்பிவைக்கப்பட்டார்.

சில முக்கியமான வீரர்கள் இல்லையென்றாலும், 3வது டெஸ்ட்டில், ஆண்டர்சனுடன் ராபின்சன் மற்றும் ஓவர்டன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களை வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜோஸ் பட்லருக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளதால், வரும் செப்டம்பர் 2ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியிலும், கடைசி டெஸ்ட்டிலும் அவர் ஆடமாட்டார் என்று தெரிகிறது.

இந்நிலையில், 3 முக்கியமான வீரர்கள் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் டேனியல் லாரன்ஸ் 4வது டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணியில் இணையவுள்ளார்.

அதேபோல காயத்தால் முதல் 3 டெஸ்ட்டில் ஆடாத ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் மற்றும் காயத்தால் 3வது டெஸ்ட்டில் ஆடாத ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீரர்களின் கம்பேக் இங்கிலாந்து அணிக்கு வலு சேர்க்கும்.