செந்தில் பாலாஜி வீட்டில் ED மீண்டும் திடீர் ரெய்டு - என்ன காரணம்?

V. Senthil Balaji DMK Karur Enforcement Directorate
By Sumathi Feb 08, 2024 05:22 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜி 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் மத்திய அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

senthil balaji

சிறையில் இருந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அவருடைய தம்பி தொடர்புடைய இடங்களில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் பலமுறை ஈடுபட்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

அமலாக்கத்துறை சோதனை

அதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கிய நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க தொடர்ந்து அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

karur senthil balaji house

இந்நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் இருந்தே சோதனை நடத்தி வருகின்றனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அங்கு அவரது பெற்றோர் வசித்து வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு தொடர்பாகவே சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.