தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பெயர் கூறுமாறு கட்டாயப்படுத்தியதா அமலாக்கத் துறை?
கேரளாவில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருக்கிறது என கூறுமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறை வற்புறுத்தியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நாள்தோறும் பல் வேறு புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. அமீரக தூதரக உதவியுடன் பிடிபட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் சட்டசபை சபாநாயகர் ராமகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன் தங்கம் கடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக சுங்கத் துறை அதிகாரிகள் தங்கக் கடத்தல் வழக்கில் தேர்தலை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே முதல்வர் பினராயி விஜயன் மீது பழி போடப்பட்டுள்ளதாக ஸ்வப்னா சுரேஷின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் பெயரை கூறுமாறு ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டார் என கைப்பட எழுதிய அறிக்கையில் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த வழக்கில் மீண்டும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.