விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் பார்த்திபன்?
தனது மனைவியை பிரிந்து 24 ஆண்டுகள் தனிமையில் இருந்த நடிகர் பார்த்தீபன் தற்போது தனது புதிய ஆசை பற்றி பேசியு்ளளார்.
நடிகர் பார்த்திபன்
இயக்குனர், நடிகர் பார்த்திபன் சமீபத்தில் யூடியூப் பேட்டியில் தனது தனிமை மற்றும் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துள்ளார். 1990-ல் நடிகை சீதாவுடன் காதலித்து திருமணம் செய்த அவர், 2001-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
அவர்களுக்கு இரண்டு மகள்கள் (அபிநயா, கீர்த்தனா) மற்றும் மகன் ராதாகிருஷ்ணன் உள்ளார். சீதா 2010-ல் மீண்டும் திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து பெற்றார்.

பார்த்திபன் கடந்த 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் மகன் ராதாகிருஷ்ணனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
பேட்டியில் அவர் கூறியது: “மகன் திருமணத்திற்கு பிறகு நான் முழுக்க தனிமையில் இருக்கும். அப்போது எனக்கு ஒரு துணை வேண்டும் என்று உணர்கிறேன்.”

அவர் கூறியபடி, அந்த துணை மன்னவி மட்டுமல்ல, உண்மையான புரிதலுள்ள தோழியாக இருக்க வேண்டும்.
“வாழ்க்கைக்குத் துணை என்பது எந்த வயதிலும் தேவைப்படலாம்” என்ற கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த உரைக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.