சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னை மாதவரம் அருகே கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஜனவரி 30ஆம் தேதி ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொப்பை கணேசனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
மேலும், கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் அவரை பிடித்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயலும்போது நடந்த என்கவுன்டரில் போலீசார் சுட்டதில் தொப்பை கணேசன் உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து, என்கவுன்டரில் உயிரிழந்த தொப்பை கணேசனின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan