90s-களின் கிராமத்து கதாநாயகன்.. 'என் உயிர் தோழன்’ நடிகர் பாபு காலமானார்!
சில கிராம படங்களில் நடித்து வந்த நடிகர் பாபு காலமானார்.
நடிகர் பாபு
தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் ‘என் உயிர் தோழன்’ என்று படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபு. இவர் அப்பொழுது இருந்து ‘என் உயிர் தோழன்’பாபு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அந்தப் படத்திற்குப் பிறகு ’பெரும்புள்ளி’, ’தாயம்மா’, ’பொண்ணுக்குச் சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார்.
தனது ஐந்தாவது படமாக ‘மனசார வாழ்த்துங்களேன்’ என்கிற படத்தில் தான் இவருக்கு பெரும் துயரம் நேர்ந்தது. அந்த படத்தில் சண்டை காட்சியில் நடிக்கும்போது மாடியில் இருந்து குதிக்கவேண்டும் அதில் டூப் போட்டுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர், ஆனால் இவர் 'தத்ரூபமாக இருக்கும்’ எனச் சொல்லி நிஜமாகவே பாபு குதித்திருக்கிறார்.
காலமானார்
இந்நிலையில், அவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறுதலாக வேறு இடத்தில் விழுந்ததில் அவருடைய முதுகுப் பகுதியில் பலத்த அடிபட்டு எலும்புகள் உடைந்துவிட்டன. அன்று முதல் இன்று வரை பாபுவின் வயதான அம்மா மட்டுமே அவரை உடனிருந்து கவனித்து வந்தார்.
இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் பாபுவின் உடல்நிலை மோசமடைய சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.