‘‘திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தடை’’- காரணம் என்ன?

covid19 tamilnadu marraige epass
By Irumporai May 17, 2021 12:11 PM GMT
Report

இ-பதிவுக்கான இணையதளத்தில் திருமணத்திற்கான அனுமதி நீக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகரித்து வருவதால் தற்போது அடுத்து ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை அமலில் வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 

இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திருமணத்திற்காக அதிக மக்கள் விண்ணப்பித்து பயணம் செய்வதால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.