இப்படியே போனால் ஆட்களை குறைப்பதை தவிர வேறு வழியில்லை : சுந்தர் பிச்சை எச்சரிக்கை

Google Sundar Pichai
By Irumporai Aug 03, 2022 07:45 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

கூகுள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில், வருவாய் எதிர்பார்த்த அளவை விட அதிகம் குறைந்து உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு காலாண்டின் வளர்ச்சி 13 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இப்படியே போனால் ஆட்களை குறைப்பதை தவிர வேறு வழியில்லை : சுந்தர் பிச்சை  எச்சரிக்கை | Employees In Google Work Sundar Pichai Warned

பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அல்லது வேலைக்கு ஆட்களை பணியமர்த்தும் பணியை தாமதப்படுத்துவது ஆகியவற்றை கடந்த சில நாட்களாக செய்து வருகின்றன.

ஆட்களை குறைக்கும் கூகுள்

பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை கூகுள் நிறுவனத்திலும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது .

இப்படியே போனால் ஆட்களை குறைப்பதை தவிர வேறு வழியில்லை : சுந்தர் பிச்சை  எச்சரிக்கை | Employees In Google Work Sundar Pichai Warned

கடந்த சில மாதங்களாக குறைந்தது 2 வாரங்களுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தி வைக்கப்படுகிறது என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நடவடிக்கை மீதமுள்ள ஆண்டின் காலகட்டத்திலும் நீடிக்கும் என அறிவிப்பு வெளியானது ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

எச்சரிக்கை விடுக்கும் சுந்தர்

இதனை தொடர்ந்து சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்யும் பணியை செய்து, அடுத்த 3 மாதங்களுக்கு, முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை ஒழுங்குபடுத்துவதற்கான பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பணியை மையமாக கொண்டு, தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தும், அதிக வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட ஒரு கலாச்சாரம் உருவாக்கும்படி தனது பணியாளர்களை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படியே போனால் ஆட்களை குறைப்பதை தவிர வேறு வழியில்லை : சுந்தர் பிச்சை  எச்சரிக்கை | Employees In Google Work Sundar Pichai Warned

உற்பத்தி திறன் ஆகியவற்றை எப்படி தரம் உயர்த்துவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். ஊழியர்களின் செயல்பாடுகளில் சுந்தர் பிச்சைக்கு மகிழ்ச்சி இல்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஊழியர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றை கூட்டி, அதில் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், திறமையாக பணியாற்றும்படியும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு உதவிடுவதில் அதிக கவனம் செலுத்தும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.