டார்கெட் முடிக்காத ஊழியர்கள் - தரையை நக்க வைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம்
டார்கெட் முடிக்காத ஊழியர்களை நிறுவனம் தரையை நக்க வைத்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊழியர்களை கொடுமைப்படுத்தும் வீடியோ
ஊழியர்கள் சிலரின் கழுத்தில் நாய் கழுத்தில் கட்டப்படும் பெல்ட் ஒன்றை கட்டி, அவர்களை முட்டி போட வைத்து, தரையை நக்க வைப்பது, ஆடைகளை களைய செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், இந்த மனிதாபிமானமற்ற துன்புறுத்தல் குறித்து விசாரணை நடத்த அறிக்கை சமர்பிக்க மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பேசியுள்ள கேரள தொழில்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி, "இந்தக் காட்சிகள் அதிர்ச்சியூட்டும் மற்றும் தொந்தரவானவை. கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் இதை எந்த விலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
விசாரணை
முதற்கட்ட விசாரணையில், தனியார் நிறுவனம் ஒன்று டார்கெட் முடிக்காத ஊழியர்களை இவ்வாறு நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
அந்த வீடியோவில் உள்ளவர்களிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இது சில மாதங்களுக்கு முன்னர் மேலாளர் எடுத்த வீடியோ என்றும், அதன் பிறகு அவரை நிறுவனம் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது. தற்போது நிறுவனத்தில் எந்த மனித உரிமை மீறலும் இல்லை." என தெரிவித்துள்ளார்.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.