அதிரடியாக உயரப்போகும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

Government Of India India
By Sumathi Jun 10, 2024 10:31 AM GMT
Report

அடிப்படை சம்பளம் அதிகளவு உயரவுள்ளதாக கூறப்படுகிறது.

8ஆவது ஊதியக்குழு

நரேந்திர மோடி 30 கேபினட் அமைச்சர்களுடன் 3வது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அதிரடியாக உயரப்போகும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - எவ்வளவு தெரியுமா? | Employees Basic Salary Will Be Increased

அவர், தலைமையிலான மத்திய அரசிடம் 8ஆவது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்த ஆணையம் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். அது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாத சம்பளம் இதுதான் - விவரம் தெரியுமா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் மாத சம்பளம் இதுதான் - விவரம் தெரியுமா?

அடிப்படை சம்பளம்

முன்னதாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தி வந்தது. அதன்படி, 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அதிரடியாக உயரப்போகும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - எவ்வளவு தெரியுமா? | Employees Basic Salary Will Be Increased

அந்த வகையில், பல்வேறு படிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது. ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும் நிலையில்,

8வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், ரூ.26,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.