டோக்கியோ ஒலிம்பிக்கில் உலகை வியக்க வைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை...!

Tokyo Olympics 2020 Emma McKeon
By Petchi Avudaiappan Aug 02, 2021 02:00 PM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை 7 பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்திருக்கிறார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடர் ஏறக்குறைய முதல் பாதியை கடந்துள்ளது. இந்த தொடரில் இந்தியாவுக்கு இதுவரை கிடைத்துள்ள 2 பழக்கங்களையும் பெண்களை பெற்று கொடுத்துள்ளனர். மேலும் பல பெண் வீராங்கனைகளும் சாதனை படைத்து வருகின்றனர். 

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கோன் தனியொரு ஆளாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது ஏழாவது பதக்கத்தை வென்றிருக்கிறார்.

எம்மா இரண்டு முறை நடப்பு சாம்பியனான அமெரிக்காவை 4×100 மீட்டர் ரிலேவில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இவர் இதுவரை 4 தங்கப்பதக்கங்களும், 3 வெண்கலப்பதக்கங்களும் வென்றுள்ளார். 

இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை எனும் புதிய வரலாற்றுச் சாதனையை எம்மா படைத்துள்ளார்.