நடுவானில் விமானத்தில் ஓட்டை : தப்பிய பயணிகள் வைரலாகும் புகைப்படம்

Arab Countries Viral Photos
By Irumporai Jul 06, 2022 11:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் 14 மணி நேரம் பெரும் துளையுடன் பறந்துள்ளது சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதிக்கு எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. ஜூலை 1 அன்று ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

விமானத்தில் ஒட்டை

ஆம் விமானத்தின் ஒரு பகுதியில் பெரிய ஒட்டை இருந்துள்ளது. இந்த துளையுடன் விமானம் 14 மணி நேரம் பயணம் செய்துள்ளதுதான் கூடுதலாக அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும் , இந்த சம்பவம் குறித்து விமானத்தில் பயணம் செய்த பேட்ரிக் என்ற பயணி கூறுகையில்:

வெடித்த விமான டயர்

விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் பலத்த இடிபோன்ற சப்தத்தை கேட்டதாகவும், விமானத்தில் இருந்த சில ஊழியர்கள் விமானத்தின் இறக்கைகளை ஆய்வு செய்ததாகவும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறுகையில் : விமானத்தின் 22 டய்ர்களில் ஒன்று பயணத்தின் போது வெடித்தன் காரணாமாக பேரிங்கின் ஒரு பகுதி விமானத்தில் சேதத்தை( ஒட்டையினை) ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் விமானத்தில் ஓட்டை : தப்பிய பயணிகள் வைரலாகும் புகைப்படம் | Emirates Plane With Hole 14 Hours

அதே சமயம் இது விமானத்தின் உள் அமைப்பிற்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியுள்ளனர் .

நல்ல வேலையாக விமானமும் அதில் உள்ள பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். தற்போது விமானத்தில் 14 மணி நேரம் பெரிய துளையுடன் பறந்ததுதான் பேசு பொருளாகியுள்ளது.