நடிகர் அஜித்துக்கு Emergency ப்ளீஸ் சீக்கிரம் போகனும் - ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த போலீஸ்..!
நடிகர் அஜித் Emergency- ஆ கிளம்பனும் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் போகனும் என மாநகர காவல் ஆணையர் ரசிகர்களை வேண்டி கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சியில் நடிகர் அஜித்
திருச்சியில் ரைபிள் கிளப் சார்பாக துப்பாகி சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டார். அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.பின்பு போலீசார் நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
ஒரு முறை உங்களை காண வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று கூறியதை அடுத்து கட்டிடத்தின் மேல் பகுதிக்கு வந்த நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்.
காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்ற ரசிகர்கள்
அப்போது ரசிகர்களின் கோஷத்தால் அந்த பகுதியே பயங்கர சத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போட்டி முடிந்து இரவு நடிகர் அஜித் ரசிகர்கள் அதிகளவில் திரண்டு இருந்ததால் அஜித் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
அங்கு வந்த காவல் ஆணையர் ரசிகர்களிடம் நடிகர் அஜித் Emergency- ஆ கிளம்பனும் ப்ளீஸ் கொஞ்சம் சீக்கிரம் போகனும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது வெளியே வந்த நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து முத்தம் கொடுத்து விடைபெற்று சென்றார்.
அஜித்தின் வருகையால் திருச்சியே நேற்று விழா கோலம் பூண்டது.