செலவுக்கு ரூ.50க்கு மேல கேட்டது குத்தமா? - கணவர் மீது மனைவி போலீசில் புகார்

Gujarat female gst officer woman harrasment
By Petchi Avudaiappan Aug 26, 2021 06:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

செலவுக்கு கூடுதலாக பணம் கேட்டால் கணவர் அடிப்பதாக மனைவி போலீசில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் சந்த்கேஹ்டா பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிந்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

அதில் 2011 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் ஜிஎஸ்டி துறையில் உதவியாளராக வேலை கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கிடைக்கும் பணத்தை மீதம் செய்ய வேலைக்கு பஸ்ஸில் செல்ல கணவர் குடும்பத்தாரால் தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், ஒவ்வொரு நாளும் தனக்கு செலவுக்கு கணவர் ரூ.50 பணம் கொடுப்பார். கூடுதலாக செலவு செய்வதற்கு பணம் கேட்டால் தன்னை கடுமையாக அடிப்பார். மேலும் எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என்று கணவர் சந்தேகப்பட்டார்.

அலுவலகத்துக்கு செல்லும்போது நான் நல்ல ஆடை உடுத்தக்கூட அனுமதிக்கமாட்டார். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கணவர் என்னை கடுமையாகத் தாக்கியதால் அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

பின்னர், கணவரின் குடும்பத்தார் வீட்டுக்கு வந்து என்னை சமாதானம் செய்து கூட்டிச் சென்று மீண்டும் தாக்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.