எக்ஸ் வலைதள வருமானம் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் - எலான் மஸ்க்!
போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை 1,200 இஸ்ரேலியர்களும் 14,100 பாலஸ்தீனியர்களும் இந்த போரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். குறிப்பாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, இந்த போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தியும் ஹமாஸை அழிக்காமல் இந்த போர் நிற்காது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
எலான் மஸ்க் உதவி
இந்த போரில் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காத அளவிற்கு பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலக கோடீசுவரரும், எக்ஸ் (ட்விட்டர்) நிறுவனத்தின் தலைவருமான எலான் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

தனது எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து IBC Tamil