என் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை - எலான் மஸ்க் அதிரடி பேட்டி!
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தனது வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
எலான் மஸ்க்
உலக புகழ்பெற்ற பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது சொந்த உழைப்பினால் தொழிலதிபராக வளர்ந்து தற்போது உலக டாப் பணக்காரர்கள் வரிசையில் உள்ளார்.

இவரின் சொத்துமதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். தன் சொந்த உழைப்பினால் வளர்ந்துள்ள இவர் தனது சொத்துக்களும், நிறுவனங்களும் வாரிசுகள் என்ற அடிப்படையில் மட்டும் யாருக்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
இவருக்கு மகன்கள், மகள்கள் என்று 9 பிள்ளைகள் இருக்கின்றனர், அதில் முதல் மகனுக்கு 19 வயதாகிறது, கடைசி மகனுக்கு 3 வயதாகிறது.
இவர்களில், டமியன் மஸ்க், காய் மஸ்க் இருவருக்கும் 18 வயது நெருங்கியதால், எலான் மஸ்க்கின் சொத்துக்களையும், பங்குகளையும் அவர்களின் பெயர்களில் மாற்ற அவரது நிதி ஆலோசகர்கள் பல முறை அவரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால், எலான் மஸ்க் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர், "எனது பிள்ளைகளுக்கு என்னுடைய சொத்துக்களையும், நிறுவனங்களையும் நிர்வகிப்பதற்கான திறமை, தகுதி, ஆர்வம் இல்லாவிட்டால், அவர்களுக்கு எனது பங்குகளை வழங்கும் முடிவை நான் நிச்சயமாக எடுக்க மாட்டேன்.
ஏனென்றால், என்னை பொறுத்தவரையில் அதை தவறென்று நினைக்கிறேன்.
என்னுடைய பிசினஸில் விருப்பமில்லாத, பிள்ளைகளுக்கு எனது நிறுவனத்தின் பங்குகளை கொடுப்பதைவிட அந்த நிறுவனங்களுக்குள் இருக்கும் தகுதியான நபர்களிடம் அவற்றை ஒப்படைப்பது நல்லது.
எனது நிறுவனங்களை நிர்வகிக்கும் திறமைகளை கொண்ட நபர்களை நான் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.