ட்விட்டரில் உங்கள் ஃபாலோவர்ஸ் குறையலாம் - எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல்

Twitter
By Irumporai Dec 01, 2022 12:08 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல சர்ச்சைகள் தொடர்ந்தது, மேலும் ட்விட்டரில் ப்ளு டிக் பெற கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் சர்ச்சை

டிவிட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் எலான் மஸ்க், பொதுமக்களின் பல கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அவர்களின் பரிந்துரைகள் நன்றாக இருந்தால் அவற்றை டிவிட்டர் செயலியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கிறார்.

கவலைவேண்டாம்

  இந்நிலையில், டிவிட்டர் பயனாளர்கள் யாரேனும் தங்களது ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை குறைவதை உணர்ந்தால் கவலைப்பட வேண்டாம்.

இதற்கு காரணமும் எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டர் நிறுவனம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை தான்.

ஸ்கேம் கணக்குகள் குறைகிறது

இதுதொடார்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ட்விட்டர் இப்போது நிறைய ஸ்கேம் கணக்குகளை நீக்குகிறது, எனவே உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைவதை நீங்கள் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் உங்கள் ஃபாலோவர்ஸ் குறையலாம் - எலான் மஸ்க் அதிர்ச்சி தகவல் | Elon Musk Warns Your Twitter

இதன் மூலம் போலி கணக்குகள் நீக்கப்படுவதால் தவறான தகவல்கள் பரப்பப்படுவது தடுக்கப்பட்டு, சுதந்திரமான பேச்சுக்கான தளமாக டிவிட்டர் நிறுவனம் உருவெடுக்கும் என கூறப்படுகிறது