டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் எலான் மஸ்க் - முக்கிய அறிவிப்பு
டாட்ஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது அரசின் செயல்திறன் துறை(டாட்ஜ் துறை) தலைவராக எலான் மஸ்க் இருந்து வருகிறார்.
இந்த துறை அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன்மூலம் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.
பங்குகள் சரிவு
இந்நிலையில், எலான் மஸ்க் மீது மக்கள் வெறுப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரது டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருநாளில் மட்டுமே 20 சதவீத பங்குகள் சரிந்துள்ளது.
எனவே, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ளவுள்ளேன். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த மாதத்துக்குள் (மே) டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகம் தெரிவித்துள்ளார்.