டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி - பணக்காரப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்...!

Twitter Elon Musk
By Nandhini Jan 02, 2023 07:00 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் எலோன் மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.இதனால் பணக்காரப் பட்டியலில் எலான் மஸ்க் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

எலான் மஸ்கின் சொத்து மதிப்பு குறைந்தது

டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியால், டெஸ்லா மற்றும் டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிகர மதிப்பிலிருந்து 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். இந்த டெஸ்லா பங்குகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து மஸ்க் தனது சொத்து மதிப்பு $137 பில்லியனாகக் குறைந்துள்ளது.

அவரது எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 65 சதவீதம் சரிந்துள்ளது. 

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில், மஸ்க் 185 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புடன், முதல் முறையாக உலகின் பணக்காரர் ஆனார். 2021ம் ஆண்டு நவம்பரில் மஸ்க் தனது சொத்து உச்சத்தை அடைந்தார்.

இது ஒரு பெரிய வீழ்ச்சிக்கு முன் $340 பில்லியனை எட்டியது. டுவிட்டரை $44 பில்லியன் கொடுத்து வாங்கிய பிறகு டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க்கின் சொத்து சரிந்தது.   

கடந்த மாதம், எலான் மஸ்க்கிற்கு பதில் ஆடம்பர பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தாய் நிறுவனமான LVMHன் தலைமை நிர்வாகி பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகப்பெரிய பணக்காரராக நியமிக்கப்பட்டுள்ளார். 

elon-musk-twitter-tesla-shares-fall