என்கிட்ட இன்னொரு பிளான் இருக்கு ,அதிரவைத்த எலான் மஸ்க் : நடுக்கத்தில் ட்விட்டர்

twitter elonmusk twitterinc
By Irumporai Apr 15, 2022 05:14 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ட்விட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்குவதற்குத் தயாராக உள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் சுமார் 9 சதவீத பங்குகளை எலன்மஸ்க் வாங்கியதகா கூறப்பட்ட நிலையில், அதன் இயக்குநர்கள் குழுவில் இடம் பெறமாட்டேன் என பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பிரெட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில் : உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தும் ட்விட்டர் தளம் மக்கள் பயன்படுத்தும் சுதந்திரமான பேச்சு தளமாக இருக்கும் என நினைத்தேன்.

ஆனால் ட்விட்டர் நிறுவனம் அவ்வாறு இயங்கவில்லை ஆகவே ட்விட்டர் நிறுவனம் அதிக ஷேர்வைத்துள்ளதால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை . ஆகவே ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கி, பிரைவேட்டாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் எலன் மஸ்க்கின் இந்த திட்டம் அவ்வுளவு சுலபம் அல்ல ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள முக்கிய பங்குதாரர்களான வான்கார்ட் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்கள் கடுமையாக எதிர்பார்கள்.

ஆகவே ட்விட்டரில் முதலீடு செய்துள்ள சிறிய பங்குதாரர்களின் 51 சதவீத பங்குகளை எலன் மஸ்க் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதிக பங்குகளை வாங்குவதன் மூலம் ட்விட்டரில் சில முக்கிய மாற்றங்களை எலன் மஸ்கினால் கொண்டுவரமுடியும் .

ஆகவே எலன் மஸ்கின் அடுத்த முடிவு என்ன என்பதை ஆவலோடு எதிர்பார்த்துள்ளது டெக் உலகு.