என்னது இனிமே ட்விட்டர் பயன்படுத்த கட்டணமா ? - எலன் மஸ்க் ட்விட்டால் பயணர்கள் அதிர்ச்சி

Twitter Elon Musk
By Irumporai May 04, 2022 05:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில், பல அதிரடி முடிவுகளை எடுத்துவருகின்றார் , அவர் ட்விட்டரில் எடுக்கப் போகும் முடிவுகள் குறித்து தனது ட்வீட் பதிவுகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் தற்போது, இனி வரும் காலங்களில் ட்விட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட்டர் பதிவில் கூறியுள்ளார். எலன் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் : சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், சாதாரண பயனர்களுக்கு சமூக ஊடக தளம் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது , ட்விட்டர் நிறுவனத்தின் வணிக மற்றும் அரசாங்க பயனர்களிடம் சிறிதளவு கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும்

சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும், ஆனால் வணிக/அரசு பயனர்களிடம் சிறிது கட்டணம் வசூலிக்கப்படும்." என பதிவிட்டுள்ளார்.