டுவிட்டரில் தன்னிடம் சண்டை போட்ட ஊழியரை ஒரு நொடியில் வேலை விட்டு நீக்கிய எலான் மஸ்க்...!

Twitter Elon Musk
By Nandhini Nov 15, 2022 01:11 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

டுவிட்டரில் தன்னிடம் சண்டை போட்ட ஊழியரை ஒரு நொடியில் வேலையை விட்டு எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.

டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்

எலான் மஸ்க் டுவிட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

மேலும், அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கினார்.

elon-musk-twitter--eric-frohnhoefer-suspended

வாக்குவாதம் செய்த ஊழியரை நீக்கிய எலான் மஸ்க்

சமீபத்தில் டுவிட்டரில் செயலி சில நாடுகளில் மிகவும் நிதானமாக இயங்குவதாக கூறி டுவிட் ஒன்றில் எலன் மஸ்க் மன்னிப்பு கேட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை Twitter மிகவும் மெதுவாக இயங்கியது அதற்கு என்ன செய்தீர்கள்? என்று எலன் மஸ்க் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த Eric Frohnhoefer என்ற ஊழியர், கடந்த 6 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்படி நீங்கள் கூறுவது தவறு என்று டுவீட் செய்தார்.

இதனால், இவர்களுக்குள் டுவிட்டரில் மோதல் வெடித்தது. இந்த வாக்குவாதம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போய் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த பலர், எலான் மஸ்க்கிடம் இதுபோல் பொதுவெளியில் கேள்வி கேட்க வேண்டாம். அது தவறு.. தனிப்பட்ட முறையில் இமெயில் மூலம் கேள்வி எழுப்புங்கள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து கமெண்ட் செய்தனர்.

இதனால், கோபத்தின் உச்சத்திற்கு போன எலான் மஸ்க் அந்த ஊழியரே அதிரடியாக அப்பொழுதே வேலையை விட்டு நீக்கினார். அதற்கு அந்த ஊழியர் தில்லாங்க Salute என்று எமோஜி அனுப்பி பதிலளித்தார்.