வேற லெவலில் டான்ஸ் ஆடுன எலான் மஸ்க்... - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...!
சமூகவலைத்தளங்களில் எலான் மஸ்க் டான்ஸ் ஆடுன வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்
எலான் மஸ்க் டுவிட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
மேலும், அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கினார்.

வைரலாகும் வீடியோ
நேற்று நடைபெற்ற சான் பிரான்சிஸ்கோவில் டேவ் சாப்பல் நிகழ்ச்சியில் எலோன் மஸ்க் பாட்டு பாடி நடனமாடினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா... என்ன ஒரு அசைவு என்று பாராட்டினாலும், ஒரு சிலரோ இவரை கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elon Musk at Dave Chappelle’s show in San Francisco today. @elonmusk pic.twitter.com/d1PtiEcNGV
— DogeDesigner (@cb_doge) December 12, 2022