டுவிட்டர் பதிவுக்கான கேரக்டர் லிமிட் 4000 ஆக உயர்த்த எலான் மஸ்க் திட்டம் - ஷாக்கான பயனர்கள்...!
டுவிட்டர் பதிவுக்கான கேரக்டர் லிமிட் 4000 ஆக உயர்த்த எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் பயனர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்
எலான் மஸ்க் டுவிட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
மேலும், அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கினார்.

டுவிட்டருக்கு கலர் கலராக ப்ளூ டிக்
சமீபத்தில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை தெரிவிக்கும் வகையில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் டிக் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
டுவிட்டர் பதிவுக்கான கேரக்டர் லிமிட்! டுவிட்டரில், பதிவுக்கான கேரக்டர் லிமிட்டை பயனர்களின் வசதிக்காக, 280லிருந்து 4000 ஆக உயர்த்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே 140ஆக இருந்த எண்ணிக்கை 2017ல் 280 ஆக உயர்த்தப்பட்டிருபபது குறிப்பிடத்தக்கது.