கலர் கலராக டுவிட்டருக்கு ப்ளூ டிக் வழங்கவுள்ள எலான் மஸ்க் ... - கட்டணம் வசூலிப்பா?
கலர் கலராக டுவிட்டருக்கு ப்ளூ டிக் எலான் மஸ்க் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் வாக்கெடுப்பு
முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் 2024ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் மறுபிரவேசம் இப்போதே தொடங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், டுவிட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், டிரம்பிற்கு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி கொடுக்கலாமா? என்று டுவிட்டரில் வாக்கெடுப்பை தொடங்கினார். சுமார் 1½ கோடி பேர் இதில் பங்கேற்று வாக்களித்தனர்.
இதில் 51.8 சதவீதம் பேர் டிரம்ப் டுவிட்டரை மீண்டும் பயன்படுத்த ஆதரவு தெரிவித்தனர். இதை தொடர்ந்து டிரம்ப் தனது டுவிட்டர் கணக்கை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை எலான் மஸ்க் நேற்று நீக்கினார். இதன் மூலம் டிரம்பின் டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
கிண்டிலடித்த எலான் மஸ்க்
நேற்று டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் ஒரு புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். அந்த பதிவில், மோசமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மேலும் எங்களை சோதனைக்கு இட்டுச் செல்லாதே... என்று பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள்... இவ்வளவு குறும்பு எலான் மஸ்க் ஆகாது என்றும், ஒரு சிலரோ இந்த பதிவிலிருந்து நீங்கள் எப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர் என்பது தெரிகிறது என்று கண்டனம் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
டுவிட்டருக்கு கலர் கலராக ப்ளூ டிக்
இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை தெரிவிக்கும் வகையில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வெவ்வேறு நிறங்களில் டிக் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும், டுவிட்டரில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் திட்டத்தை வரும் 29ம் தேதி தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அவை மீண்டும் ஒத்தி வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.