75% ஊழியர்களை வேலையிலிருந்து தூக்கப்போகும் எலான் மஸ்க் - வெளியான தகவல் - கலக்கத்தில் ஊழியர்கள்
75% ஊழியர்களை டுவிட்டர் நிறுவனத்திலிருந்து நீக்க எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருவதால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்
எலான் மஸ்க் டுவிட்டரை பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் 44 பில்லியன் டாலர்களுக்கு சமீபத்தில் விலைக்கு வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
மேலும், அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து உடனடியாக நீக்கினார்.

75% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போகும் எலான் மஸ்க்
இந்நிலையில், டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. எலான் மஸ்க், ஆட்குறைப்பு நடவடிக்கையில் தற்போது தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அவர், அந்நிறுவனத்தில் 75% பேரை வேலையிலிருந்து நீக்குவதற்கு பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது 7500 பேர் அங்கு பணியாற்றும் நிலையில், அது 2000ஆக குறைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், டுவிட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.