கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் உறவில் இருந்தேனா? - கடும் கோபத்தில் எலான் மஸ்க்

Twitter Elon Musk
By Nandhini Jul 25, 2022 11:11 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் எலன் மஸ்க் தொடர்பு என்று செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விளக்கம் அளித்துள்ளார் எலன் மஸ்க்.

அதிரடி அறிவிப்பு

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க்,

தனது முன்னுரிமைகளில் ஒன்று “ஸ்பேம் போட்களை” அகற்றுவது என்று டுவீட் செய்த சில நாட்களுக்குப் பிறகு, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறினார்.

மனைவிகள்

எலான் மஸ்க்கின் முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் கனடாவை சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர். எலான் மஸ்க்கிற்கு முதல் மனைவி மூலம் 5 குழந்தைகள் பிறந்தன.

இதனையடுத்து, கனடாவை சேர்ந்த பாடகி கிரிமிஸ் மூலம் 2 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது மொத்தமாக எலான் மஸ்க்கிற்கு 9 குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மூத்த பெண் அதிகாரியுடன் காதலா?

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவான் சில்ஸ் என்ற மூத்த பெண் அதிகாரியுடன் காதல் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின,

இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பரும் கூகுள் இணை நிறுவனருமான செர்ஜி பிரின் மனைவியுடன் ரகசிய உறவு வைத்திருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்த செர்ஜி பிரின் கடந்த ஆண்டு ஜனவரியில் விவாகரத்து கோரி முறையிட்டு இருந்தார். 

ஷனஹன் உடன் தொடர்பு?

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மியாமி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது எலான் மஸ்க்கிற்கும் கூகுள் இணை நிறுவனரின் மனைவியாக இருந்த ஷனஹன் உடன் தொடர்பு ஏற்பட்டதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நாளிதழி செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய நடத்தைக்காக செர்ஜி பிரின் முன்பு மண்டியிட்டு மன்னித்துவிடுமாறு எலான் மஸ்க் கேட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி வெளியானதால் இது குறித்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூகவலைத்தளத்தில் இது குறித்த விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

elon musk-twitter

எலான் மஸ்க் டுவிட்

இச்செய்தி கண்டு கோபமடைந்த எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அப்பதிவில், தற்போது வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் தவறானது. இது முட்டாள்தனமானது. நானும் செர்கேவும் நல்ல நண்பர்கள். நேற்று இரவு கூட ஒரு பார்ட்டியில் ஒன்றாக கலந்துக் கொண்டோம். நிக்கோல் ஷனாஹனை 3 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே நான் சந்தித்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.