இனி வரும் காலங்களில் டுவிட்டர் பயன்படுத்த கட்டணம் - எலான் மஸ்க்

Elon Musk
By Nandhini May 04, 2022 06:12 AM GMT
Report

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலன் மாஸ்க் வாங்கியுள்ளார்.

இனி, டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. டுவிட்டரை வாங்கிய பிறகு எலான் மஸ்க் பேசுகையில், முன்பை விட டுவிட்டரை சிறந்ததாக மாற்ற நான் அதிகம் விரும்புகிறேன்.

டுவிட்டரை அதிகபட்சமாக FUN-ஆக மாற்றுவோம். டுவிட்டர் DMகளில் ‘சிக்னல்’ செயலி போன்ற END TO END ENCRYPTION இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் குறுந்தகவல்களை யாரும் உளவு பார்க்கவோ, ஹேக் செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊழியர்களை வெளியேற்றவும், செலவுகளை குறைக்கவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கியமாக, டுவிட்டரின் பாலிசி துறையில் ஊழியர்களை வெளியேற்றுவது பற்றி எலான் மஸ்க் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டுவிட்டர் சேவையை இனி வரும் காலங்களில் அரசு மற்றும் வணிகப் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது என்றும், வழக்கமான பயனர்களுக்கு இலவசம் என்றும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

இனி வரும் காலங்களில் டுவிட்டர் பயன்படுத்த கட்டணம் - எலான் மஸ்க் | Elon Musk Twitter